கட்டு மந்திரங்கள்

Author: Sabtharishi /

நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின்

ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு... பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகத்தியர் பன்னிரு காண்டம் மற்றும் அகத்தியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது. இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது... "பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன் வகையோடே மந்திரத்தை தான் மைந்தா தனி தனியாய் உருத்தான் போடு போடே" - அகத்தியர் - நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம் நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம் நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம் மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்.. --------------------------------------------------------- "உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு உத்தமனே அம் ஹீம் என்று லட்சம் திருவாக செபித்துவர கட்டுத்தீரும்" - அகத்தியர் - முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. --------------------------------------------------------- "ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர அருவாக ஹீம் உறீம் என்று லட்சம் அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்" - அகத்தியர் - ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்.. ------------------------------------------------------------ "நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே" - அகத்தியர் - நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். புதனுக்கான உடல் கட்டு மந்திரம்.. ------------------------------------------------------- "என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம் நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்" - அகத்தியர் - புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். குருவுக்கான உடல் கட்டு மந்திரம்.. -------------------------------------------------------- "நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம் அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்" - அகத்தியர் - நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. -------------------------------------------------------------- "இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு இறீம் றீம் நசி மசி யென்று போடே" - அகத்தியர் - சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். சனிக்கான உடல் கட்டு மந்திரம்.. ---------------------------------------------------- "போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி தேடுவாய் லட்சமுருப் போடு போடே" - அகத்தியர் - பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. ---------------------------------------------------- "திறமான இராகுவுட கட்டுதீர நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம் நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்" - அகத்தியர் - திறமான இராகு பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. ------------------------------------------------------ "சாடுவாய் கேதுவுட கட்டு தீர சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே" - அகத்தியர் - கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகதியர். நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் கட்டு மந்திரங்களை அகத்தியர் அருளியிருக்கிறார். குளிகன் உடல் கட்டு மந்திரம்.. ---------------------------------------------- "நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம் தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா" - அகத்தியர் - குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம். ------------------------------------------------------------- "பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப் பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும் சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும் கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும் குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும் காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும் கணக்குலட்ச முருச் செபித்துப் போடே" - அகத்தியர் - "வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் என்கிறார். இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது உடல் முழுமையாக உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார். உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை ---------------------------------------------------------------- சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் மந்திரங்கள் மட்டுமே கூறப் பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு கொண்டு வருவது போன்றவைகள் குருவினால் மட்டுமே கூறிட இயலும். தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை வலியுறுத்துவதன் பின்னனி இதுதான். இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி பார்ப்போம். "தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள் சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு வருவில்லா சிவயனார் மந்திரந்தானும் வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம் திருவான வினாயகரின் சுழியை முந்திச் செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே" - அகத்தியர் - குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், மேலும் திருவான வினாயகரின் சுழியை முதலில் செபித்தே தனது மந்திரங்கள் அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று சொல்கிறார். "அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு வடக்குமுகம் இருந்துலட்சம் உருத்தான்போடு" - அகத்தியர் - மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க வேண்டும் என்கிறார்

0 comments:

Post a Comment

Search This Blog

Pages

அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?

3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...