3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக்குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.இப்போது மூன்றே நாளில் தொப்பையைக்குறைக்க உதவும் ஜூஸ் செய்வதை பற்றி பார்ப்போம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப்பொருளும் ஒன்று இது. எலுமிச்சைஎலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக்கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும். புதினாபுதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக்கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். இஞ்சி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக்கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம். தண்ணீர் தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக்குறைக்கும்.குறிப்புமேற்கூறிய பொருட்களைக்கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம்.அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.ஜூஸ் செய்யும் முறைவெள்ளரிக்காய்- 1எலுமிச்சை- 5புதினா இலைகள்- 15டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி- 2தண்ணீர்- 2.5 லிட்டர்வெள்ளரிக்காய், 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக்காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.
சத்தி கணபதி மந்திரம்
Author: Sabtharishi / Labels: அகத்தியர்ஓம் சிவ சுதாஓம் சத்தி சுதா ஓம் சித்தி புத்திர காதலா ஓம் வல்லபை பிரியா ஓம் சரவணபவ ஜேஸ்டா ஓம் சர்வா பீஸ்ட ஹாத ஓம் கணபதே நம நம ஓம் கீலிம் சவ்வும்
வேறு தியானம்
ஓம் மூலாதார தேவி சர்வவிக்ன வினாசன்.
ஓம் சர்வசத்தப் பரியிலினி.
ஓம் சர்வசித்திகரனி.
ஓம் வல்ணபை நமஹா.
கன்னிகா மாதத்தில் பூர்வ பசஷத்தில் பிரதமையன்று சத்திபூசை தொடங்கவும் நவராத்திரி ஆரம்பத்தில் யந்திர திரு மேனியில் மேல்வாசல் நிருவப்பட்டிருக்கும் வினாயக பகவான் திருமுன்பிலமர்ந்து தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் படைத்து அருகம்புல்லால் மந்திரத்தை 108 உரு ஜெபித்து என்னுடைய பூஜைக்கு விக்கினமின்றி யனுக் கிரகிக்க வேண்டுமென்று பிரார்த்தித்து முதலாவது பிள்ளையார் திருவருட்பிரசாதம் பெற்றுக் கொண்டு அப்பால் வடக்கு வாசல் வந்து வல்லமை தியானம் செய்ய அஷ்டமாசித்துகளும் கை கூடும் (அகத்தியர் அஷ்டமாசித்தி.(1500ல்)கூறியது
தொழுகண்ணி
Author: Sabtharishi /துண்டிக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைக்கும் சக்தியுடைய இம் மூலிகைக்கு இது சனப்ப இலையைப் போன்ற இலையையுடையது. இதைத் தொட்டவுடன் பக்க இலையுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு கை கூப்புவது போன்று இருப்பதால் இதற்குத் தொழுகண்ணி என்னும் பெயர். இது ஒரு முழ உயரம் உள்ள இச்செடி அந்தி மல்லிகைச் செடியை போலவே இருக்கும். இதை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து. அணி வேர் அறாமல் தோண்டி எடுத்து வந்து நிழலில் உலர்த்தி இடித்துத் தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து ஒரு சீசாவில் பதனம் செய்யவும். இதைக் காலை.மாலை இரு வேளையும் திரிகடி பிரமாணம் தேனில் குழைத்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால் சகல நோயும் தீர்ந்து காயசித்தியாகும் நரை திரை மாறும் பதினாறுவயது குமரனாகவும் மதயாயைப் போன்ற வலிமையும் பெறுவதுடன் துண்டு துண்டாக வெட்டினாலும் ஒன்று கூடும். உயிர் போகாது என காலாங்கிநாதர் மலைவளம் என்னும் நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது இதன் வடக்குப்போகும் வேரைக் கொண்டுவந்து தங்கத் தாயத்தில் அடைத்து வலது புஜத்தில் கட்டிக் கொண்டால் சகல காரியம் சித்தியாகும்.வியாபாரம்.தொழில்.விவகாரம் முதலிய எல்லா காரியமும் கைகூடும்.இதற்குப் பூஜை செய்து அணியவும்
Agathiyar
Author: Sabtharishi /சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார். வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
அகத்தியர் அருளிய சிவதீட்சை ரகசியம்
Author: Sabtharishi /முப்பத்தி இரண்டு மந்திரங்கள் . இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள். நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலன் பெற்றுக் கொள்ளலாமே என்று நினைக்க வேண்டாம். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும். அகத்தியர் இயற்றிய பாடலுக்கான விளக்கத்தை விரிவாக பார்க்கலாம். சிவதீட்சை - 1 ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர். சிவதீட்சை - 2 "ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார். சிவதீட்சை - 3 "குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார். சிவதீட்சை - 4 "ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார். சிவதீட்சை - 5 "யங் வங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார். சிவதீட்சை - 6 "சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார். சிவதீட்சை - 7 "இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார். சிவதீட்சை - 8 "மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார். சிவதீட்சை - 9 "வங் கிலியும் சிங் அம் ஐம்" என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார். சிவதீட்சை - 10 "வம் வும் அம் இம்" என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார். சிவதீட்சை - 11 "மங் றீங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார். சிவதீட்சை - 12 கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. "வம் ஆம் நம்" என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார். சிவதீட்சை - 13 அறிவுத் தெளிவுடன் "ஊம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார். சிவதீட்சை - 14 "றம் றூம் ஸ்ரீம் அவ்வு" என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் . சிவதீட்சை - 15 ஸ்ரீம் றீம் றீம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார். சிவதீட்சை - 16 "சங் இங் றங்" என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும். சிவதீட்சை - 17 "றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும். சிவதீட்சை - 18 "சங் சிங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும். சிவதீட்சை - 19 "திரிநேத்திராயா வா வா" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார். சிவதீட்சை - 20 "ஸ்ரீங்காரதேவாய நமா" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும். சிவதீட்சை - 21 "இங் அங் றங்" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும். சிவதீட்சை - 22 "அரி அரி ஓம்" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும். சிவதீட்சை - 23 "ரா ரா ரா றீம் றீம்" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும். சிவதீட்சை - 24 குணமாகவும் மறைவாகவும் "லீ லீ லீ அரஹர றீ றீ றி" என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர். சிவதீட்சை - 25 இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். "ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார். சிவதீட்சை - 26 இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, "இஷயா இஷயா ஓம்" என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார். சிவதீட்சை - 27 இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். "ஓம் சிவாய சிவா றீங்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார். சிவதீட்சை - 28 இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். "சிவ ஓம் சிவாய நம" என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர். சிவதீட்சை - 29 இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு "சவ்வும் மவ்வும்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார். சிவதீட்சை - 30 முப்பதாவது தீட்சையைக்கேள். "மங் சங் கங்" என்று லட்சம் உரு செபிக்க உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும் சிவதீட்சை - 31 , "ஸ்ரீம் றீம்" என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார். சிவதீட்சை - 32 முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.
நூறு வயது ஆயுளை தரும். அழுகண்ணி மூலிகை
Author: Sabtharishi /நூறு வயது ஆயுளை தரும். அழுகண்ணி மூலிகை அழுகண்ணி காயகற்பம் மூலிகை
இது வேலால் தாக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைத்துப் புண் ஆகாமல் ஆற்றும் சத்தியுடைஞது: இதுறகு வட மொழியில் சாவல்யகரணி என்று பெயர்.இது கடலை இலை போன்ற இலையுடன் ஒரு அடி உயரம் உள்ள குத்துச் செடியாக இருக்கும்.இதன் இலை தடிப்பாகவும் வழு வழுப்பாகவும் .இலையில் இருத்து பனித்துளிபோன்று நீர் கசிந்து சொட்டுவதால் இலையின் அடியில் ஈரமாகவும்.எறும்பு மொய்த்துக் கொண்டும் இருக்கும்.இது இனிபபு சுவையுடையது இதை முறைப்படி காப்பு கட்டி. சாபம் போக்கி எடுக்கவேண்டும். இதைக் கொண்டுவந்து நிழல்பாடம் செய்து உலர்ந்தபின் இடித்துத் தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து ஒரு சீசாவில் பதனம் செய்யவும் இதை திரிகடி பிரமாணம் தேனில் குழைத்துக் காலை மாலை இருவேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் வேல். ஈட்டி. அம்பு. முதலிய கூரிய ஆயுதம் உடலில் தாக்கப்பட்டவுடன் தண்ணீர் பிரிந்து கூடுவது போல் கூடும். வெட்டு குண்டு முதலியன உடலைஒன்றும் செய்ய இயலாது மேலும் நரை திரை நீங்கி காயகற்பம் ஆகும் யானையைப் போன்ற வலிமையும் அருணனைப் போன்ற அழகும் உண்டாவதுடன் (வெகு காலம் உடல் அழிவுறாது.) இதன் வடக்குப்போகும் வேரை எடுத்துத் தங்கத்தால் தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து. பூஜை செய்து வலது புஜத்தில் கட்டிக்கொண்டால் சகல காரிய சித்திவுண்டாகும். லட்சுமி கடாட்சம் தொழில் விருத்தி வியாபாரம் விவகார ஜெயம் முதலிய காரியசித்தி ஏற்படும்.மூட்டு எழும்பு வலி தைலம்
Author: Sabtharishi /மூட்டு எழும்பு வலி தைலம் எலும்புகளுக்கிடையிலும் ஒருவித சவ்வு உள்ளது. இதற்கு கார்டிலேஜ் என்று பெயர் இந்த சவ்வுதான் மூட்டுகளின் அசைவிற்கு உதவுகிறது. இந்த சவ்வுகளில் வாய்வு சேர்ந்து அது வாத நீராக மாறி மூட்டு வலியை ஏற்படுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் குடல் அழற்சி, பித்த அதிகரிப்பு, பித்த எரிச்சல், நெஞ்செரிச்சல் இவைகளால் மூட்டு வலி உண்டாகும். பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அதிக ஓய்வில்லாமல் வேலை செய்வதாலும், மாடிப்படிகளில் ஏறி இறங்குவதாலும் கூட மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிலக்கான பெண்களை பழங்காலத்தில் ஓரிடத்தில் அமரச் செய்து ஓய்வு கொடுத்ததன் அர்த்தம் தற்போது புரிகிறது.
கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவுக்கு இட்டு செல்வதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும். மனித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும். உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களா இதை உங்கள் நண்பர்களுக்கு சேர் பண்ணுங்க.Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...