how to #original #RASAMANI #seimurai ரசமணி செய்யும் முறை எப்படி 9626113916
#siththarkal 64 #pasanam #Power full #RASAMANI #seimurai & #சித்தர்கள் கூறிய 64 பாஷாணம #ரசமணி
Author: Sabtharishi /Jatilinka vaalai racam pirikkum murai & #ஜாதிலிங்கத்தில் #வாலை #ரசம் எடுப்பது எப்படி
Author: Sabtharishi /Jatilinka vaalai racam pirikkum murai & #ஜாதிலிங்கத்தில் #வாலை #ரசம் எடுப்பது எப்படி
பெய் விரட்டும் மந்திரம்
Author: Sabtharishi /திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது
"அகத்தியர்" "கட்டடா பேயினது முறையைக்கேளுகாணுகிற குணங்காணும் கருத்தில் சொல்வேன்இஷ்டமுடன் பெண்களையாண் ரூபமாக்கும்மினிதான ஆணானால் மோகினியைக் காட்டும்நட்டிரவில் சாய்பிதற்றும் கருவழிக்கும்நளிர்சுரங்கள் பெரும்பாடு நடுக்கும்பித்தம்முட்டெனவே பெண்புருஷன் கூடிவாழ்வாள். முறையையுட னதுபோகு முறையைக்கேளே."- "கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்கிளர்பஞ்சா க்ஷரத்தினது கிருபைநோக்கிஆளடா கோழிபன்றி யாடுகாவுஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடுதாளடா காரீயம் செம்புதங்கம்தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்டபாழடா அலகையென்ற பேய்களெல்லாம்பறக்குமடா பிரமராட்ச சும்பாரே."- பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களை பிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன், காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக் கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார். காரீயம் அல்லது செப்பு அல்லது தங்கத்திலான தகடுகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதில் பஞ்சாட்சர மந்திரத்தை கீறி, அதனுடன்“அ, இ, அரி, ஓம்”என்கிற பீஜாட்சர மந்திரத்தையும் எழுதிட வேண்டுமாம். பிறகு பரமேஸ்வரனது திருவடிகளை தியானித்து பஞ்சாட்சர மந்திரத்தை 500 தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு இந்த தகட்டைபாதிக்கப் பட்டவரின் இடுப்பு அல்லது கழுத்து அல்லது தலையில் கட்ட அவர்களை பீடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பிரம்மராட்சதர்கள் விலகி அவர்கள் சுகமாவார்கள் என்கிறார் அகத்தியர்.செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கட்டு மந்திரம்...
Author: Sabtharishi /அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள். யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை. ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனிமந்திரத்தைக் கேள், “ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,லங்காபுரி ராவண சம்ஹாரா, சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களைபிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்குஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா" திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள், பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காதுஎன்கிறார் அகத்தியர். இத்துடன்" பாவி தானாக்கால் யேது மேன்மை"என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் பலிக்காது.
பேய்களை விரட்டுவது எப்படி
Author: Sabtharishi /ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்!சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!!இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.
திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை!துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப்போகச் செய்யலாம். துர்மரணமடைந்ததுவாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது. சில மூலிகைகள் நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும். புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும். ஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும். மாந்திரீகத்தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.கடன் பிரச்சனையை தீர்க்கும் ரின் முக்தி மந்திரம்
Author: Sabtharishi / Labels: அகத்தியர்கடன் பிரச்சனையை தீர்க்கும் ரின் முக்தி மந்திரம் கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது. “
ஓம் விஸ்வதர்ஷன தேவ்தாய் நம்” இந்த மந்திரம் மிகவும் ஆற்றல் மிகுந்த ரின் முகி மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை நாம் வழக்கமான மந்திரம் துதிக்கும் முறையில் துதிக்க கூடாது. தினமும் காலையில் நீங்கள் குளிக்கின்ற போதே 18 முறை இந்த மந்திரத்தை துதிக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இம்மந்திரத்தை துதிப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை தொடர்ந்து துதித்து வருவதால் கடன் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், அனைத்து கடன்களையும் சீக்கிரத்தில் அடைக்கும் நிலை உண்டாகும். கடன் சம்பந்தமான பிரச்சனை இல்லாதவர்கள் கூட மந்திரத்தை துதிப்பதால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும். கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.ஆண்குறி பெரிதாக சங்கம்பழம் ஆண் குறி பெரியதாக வளர
Author: Sabtharishi /தேவையான மூலிகைகள்
1. சங்கம் பழம் 2. பச்சை கற்ப்பூரம் நன்கு பழுத்த ஐந்து ஆறு சங்கம் பழம் எடுத்துத்து சாறு பிழிந்து விதை நீக்கி பிறகு காற்று புகாத புட்டியில் அடைத்து வைத்துக் கொள்க. சேகரிக்கப்பட்ட சங்க பழச்சாற்றில் இருந்து மூன்று முதல் நாங்கு சொட்டு சாற்றை சிறிய கல்வத்தில் இட்டு அதனுடன் சிறிது மருத்துவ தன்மை உடைய பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு நசுக்கி அரைத்த பின் நீர் போன்று இருக்கும் அதை ஆண்குறியின் முன் தோளை நீக்காமல் அடி பகுதி முதல் நுனிவரை பட்டும் படாமல் தடவ வேண்டும். அதிகமாக சங்கம் பழ சாற்றை பயன்படுத்தினால் தோள் கருகி புண் உண்டாக்கும். சாறு தடவிய பின் ஆண் குறியானது உடலின் எந்த பகுதியிலும் படாமல் காற்று ஓட்டமாக இருக்கும் வண்ணம் துணியை அமைத்து கொள்ள வேண்டும். இதற்க்கு ஆணின் உள்ளாடையில் துளையிட்டு பயன்படுத்தலாம். சாறு தடவிய சிறிது நேரத்தில் நமச்சல் ஏற்ப்படும் தேய்க்கவோ அல்லது சொரியவோ கூடாது. அவ்வாறு செய்வதால் தோள் கருகி புண் உண்டாக்கும் இரவில் தடவி பின் காலை சுத்தமான நீரில் கழுவி விடவேண்டும், 2வது நாள் முதல் ஆண்குறி பெருக்க ஆரம்பிக்கும். தேவையான அளவு வந்த பின் நிறுத்திவிடுக. அதிக பட்ச்சமாக 15 நாட்கள் மட்டும் படுத்தலாம். அதற்குள் நன்கு பருத்துவிடும் நீளமும் ஒரு செண்டிமீட்டர் வரை அதிகமாகி நீண்டு காணப்படும். சேகரிப்பட்ட சாற்றினை அதிகபட்சமாக 2 அல்லது 3 நாட்கள் பயன் படுத்தலாம் பின் புதிதாக தயார் செய்து கொள்க. இம்முறையால் விந்து நீர்த்து போகும் அதற்க்கு விந்து தம்பன மூலிகைகளை தயார் செய்து பயன்படுத்த வேண்டும். குறிப்பு:- உடல் தகுதி ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். தகுந்த மருத்துவ ஆசன் அறிவுறையின் படி மட்டுமே செய்து பார்க்க வேண்டும். இது சற்று கடினமான மருத்துவ முறை அளவுகள் சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் ஆண்மை பாதிப்புகள் ஏற்பட நேரிடலாம். நாங்கள் பதிவிட்டு இருப்பது அனுபவமுடைய சித்த மருத்துவ ஆரய்ச்சியாலர்கள் ஆய்விற்க்கு உட்படுத்த மட்டுமே. சுயவிருப்பத்துடன் செய்து பார்பதற்க்கு நாங்கள் பொருப்பல்ல.வாலை தேவி மஹா மந்திரம்
Author: Sabtharishi /வாலை தேவி என்பவள் சித்தர்களால் வணங்கி வழிபட்டு வந்த ஓர் பெண் தெய்வமாகும். அவ்வாறு சித்தர்களால் வழிபட்டு வந்த தேவியை நாமும் வழிபட மாந்திரிகம் என்னும் நூலில் தேவியின் மந்திரத்தையும் வழிபடும் முறையையும் கருவூரார் சித்தர் கூறியிருக்கிறார். கீழ் காணும் மந்திரத்தை ஒரு லட்சம் உரு ஜெபிக்க சித்தியாம். மூலமந்திரம்: "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹா" இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. மேலும் இந்த தேவியால் சர்வ சுப காரியங்களும் சித்தியாகும். செல்வம் பெருகும். உடலில் உள்ள நோய்களெல்லாம் விலகி விடும்
அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு
Author: Sabtharishi /மயில் இறகை புனிதமானதாக கருதி, வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும். மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும். வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும். நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும். மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம். திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
வியாதி குணமாக பைரவருக்கு மிளகு தீப வழிபாடு
Author: Sabtharishi /அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவில் கால பைரவருக்கு 9 வாரம் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவில். திருவிடைமருதூரில் இருந்து சென்றாலும் 4 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம். கால பைரவரை தேய்பிறை அஷ்டமிகளில் அஷ்ட லட்சுமிகளும் வழிபடுவதாக ஐதீகம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் எல்லாவிதமான நலன்களும் வந்து சேரும். இந்த ஆலயத்தில் உள்ள கால பைரவர் நோய்கள் பலவற்றை தீர்க்கும் வல்லமை கொண்டவராக திகழ்கிறார். தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், இத்தல கால பைரவருக்கு 9 வாரம் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 5 அஷ்டமி தினங்கள், பைரவருக்கு மாதுளம் பழச்சாற்றினால் அபிஷேகம் செய்தால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கை கூடும். கால பைரவருக்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்து வழிபட்டால் பில்லி, சூனியம், உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என தலபுராணம் கூறுகிறது. இது தவிர இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால நேரத்தில், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அஷ்டமி திதி, பவுர்ணமி தவிர வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிடைக்கும்
பூதங்ககளைக் காண ஜாலம்
Author: Sabtharishi /அழிஞ்சில் தைலத்தினால் விளக்கு ஏற்றி வைத்தால் அவர் அந்த வெளிச்சத்தில் இரவு நேரத்தில் பூமியில் வானில் போகும் பூதங்ககளைப் பார்க்கலாம
நாகபாம்பின் விஷம் இறக்கும் மந்திரம்
Author: Sabtharishi /சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது கடித்து விஷம் தலைக்கேறி விட்டால் அந்த விஷத்தை இறக்கும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் விஷம் இறங்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார். சித்தியுள்ள நாகமதின் வித்தையப்பாதெளிந்துகொண்டு மனதுறுதி யாகப்பாருகொல்லென்ற கூத்துவனார் லபியினாலேகொடுமையென்ற விஷமேறித் தலைமேற்கொண்டாசொல்லென்ற சொல்லதினால் மைந்தாமைந்தாசுகமாகத் தீருதற்கு மந்திரங்கேளு வில்லென்ற விசைபோலே விஷத்திற்பாய்ம்விசையாக அங்கிலிசிங் நசிநசியென்னே.யெண்ணியுரு அருபதிலே விஷந்தான்தீரும்யென்மகனே உறுதிகொண்டு இருந்துபாருபுத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்ஆதிதொடுத் தந்தமந்திரம் சித்தியாமே. ஒருவரை நாக பாம்பு தீண்டி விஷம் அவர உடலெங்கும் பரவி தலைக்கேறி விட்டால், அவர் அருகில் அமர்ந்து"அங்கிலி சிங் நசி நசி"என்ற மந்திரத்தை அறுபத்தி நான்கு தடவை தொடர்ந்து உச்சரிக்க உடலில் பரவிய விஷம் இறங்கிவிடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம். இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
கட்டு மந்திரங்கள்
Author: Sabtharishi /நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின்
ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு... பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகத்தியர் பன்னிரு காண்டம் மற்றும் அகத்தியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது. இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது... "பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன் வகையோடே மந்திரத்தை தான் மைந்தா தனி தனியாய் உருத்தான் போடு போடே" - அகத்தியர் - நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம் நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம் நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம் மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்.. --------------------------------------------------------- "உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு உத்தமனே அம் ஹீம் என்று லட்சம் திருவாக செபித்துவர கட்டுத்தீரும்" - அகத்தியர் - முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. --------------------------------------------------------- "ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர அருவாக ஹீம் உறீம் என்று லட்சம் அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்" - அகத்தியர் - ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்.. ------------------------------------------------------------ "நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே" - அகத்தியர் - நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். புதனுக்கான உடல் கட்டு மந்திரம்.. ------------------------------------------------------- "என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம் நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்" - அகத்தியர் - புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். குருவுக்கான உடல் கட்டு மந்திரம்.. -------------------------------------------------------- "நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம் அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்" - அகத்தியர் - நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்.. -------------------------------------------------------------- "இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு இறீம் றீம் நசி மசி யென்று போடே" - அகத்தியர் - சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். சனிக்கான உடல் கட்டு மந்திரம்.. ---------------------------------------------------- "போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி தேடுவாய் லட்சமுருப் போடு போடே" - அகத்தியர் - பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. ---------------------------------------------------- "திறமான இராகுவுட கட்டுதீர நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம் நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்" - அகத்தியர் - திறமான இராகு பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்.. ------------------------------------------------------ "சாடுவாய் கேதுவுட கட்டு தீர சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே" - அகத்தியர் - கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகதியர். நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் கட்டு மந்திரங்களை அகத்தியர் அருளியிருக்கிறார். குளிகன் உடல் கட்டு மந்திரம்.. ---------------------------------------------- "நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம் தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா" - அகத்தியர் - குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம். ------------------------------------------------------------- "பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப் பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும் சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும் கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும் குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும் காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும் கணக்குலட்ச முருச் செபித்துப் போடே" - அகத்தியர் - "வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் என்கிறார். இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது உடல் முழுமையாக உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார். உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை ---------------------------------------------------------------- சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் மந்திரங்கள் மட்டுமே கூறப் பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு கொண்டு வருவது போன்றவைகள் குருவினால் மட்டுமே கூறிட இயலும். தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை வலியுறுத்துவதன் பின்னனி இதுதான். இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி பார்ப்போம். "தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள் சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு வருவில்லா சிவயனார் மந்திரந்தானும் வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம் திருவான வினாயகரின் சுழியை முந்திச் செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே" - அகத்தியர் - குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், மேலும் திருவான வினாயகரின் சுழியை முதலில் செபித்தே தனது மந்திரங்கள் அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று சொல்கிறார். "அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு வடக்குமுகம் இருந்துலட்சம் உருத்தான்போடு" - அகத்தியர் - மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க வேண்டும் என்கிறார்1 .அணிமா
Author: Sabtharishi /1 .அணிமா - யார் கண்ணுக்கு புலப்படாமல் ஒரு சிறு அணுவாக சஞ்சரிப்பது 2. மகிமா - ஓரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவது 3.லகிமா - உடலை எடையற்றதாக்கி காற்றில் மிதப்பது 4. கரிமா - உடல் எடையையும்,வலிமையையும் ஒரு மலைக்கு சமமாக உயர்த்திக் கொள்ளுதல் 5.ப்ராப்தி- நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்பது 6.ப்ரகாம்யம் -விரும்பிய அனைத்தையும் எளிதாகப் பெறுவது 7.ஈசித்வம் - எவ்விதமான சக்தி படைத்தவரையும் அடக்கி ஆள்வது 8.வசித்வம் - உலகம் முழவதையும் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பது . ஆகியனவாகும். மாயமாய் மறைவதெப்படி? ஒருவரை நாம் கண்டே பிடிக்க முடியாவிடில், அவன் மாயமாய் மறைந்து விட்டான் என உவமையாகச் சொல்வது வழக்கம். மற்றபடி நமது புராணக் கதைகளின் ஊடே ஒரு இடத்தில் இருந்து சட்டென மறைந்து வேறு இடத்தில்தோன்றுதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது. நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா? சாத்தியமே என்கிறார் அகத்தியர். "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. ஆமாம்.. நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் அஞ்சன மை ஒன்றைப் பற்றி கூறியிருக்கிறார். அதை எப்படி தயார் செய்வது? சித்தியுள்ள அஞ்சனந்தா னொன்றுகேளுதிறமான தேவாங்கு காமரூபிபத்தியுள்ள கருக்குருவி மூன்றின்பிச்சும்பாலகனே ஒன்றாக கருக்கிக் கொள்ளுசுத்தமுள்ள முட்டோட்டி லிட்டுக்கொண்டுசூதுகப டில்லாமல் வருக்கும்போதுபத்தியுடன் தானுருகி மையாய்நிற்கும்மார்க்கமுடன் கல்வமதில் வைத்துக்காணேகாணவே பேரண்டத் தயிலம்விட்டுகடைந்தெடுக்கும்போதிலிருக் கண்ணிற்காணும்ஊணவே ஓம்கிலிரங்ரங் கென்றேதான்உத்தமனே தான்செபித்து வழித்துக்கொண்டுபேணவே மதகரியின் கொம்பில்வைத்துபிலமான சிமிழதனைப் பதனம்பண்ணிபண்ணியந்த மையெடுத்துத் திலதம்போட்டுகண்ணிறைந்த காட்சியிலே நின்றால்மைந்தாகாசினியி லுனதுருவைக் காணமாட்டார் புண்ணியனே மனதுகந்த யிடத்தில்நின்றுபோதமுடன் ஞானநெறி தன்னைப் பாருதன்னருளைத் தனதாகப் பார்த்துப்பின்புசங்கையுடன் திலதமதை யெடுத்துப்பாரே என்னசொல்வேன் உனதுரு கண்ணிற்காணும்தேவாங்கு, காமரூபி, கருக்குருவி ஆகியவற்றின் பிச்சுக்களை ஒன்றாக எடுத்து கருக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சுத்தமான முட்டை ஓட்டில் சேகரித்து வறுத்து எடுத்துக் கொள் வேண்டுமாம். அப்போது அவை உருகி மை போலாகி இருக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மையை கல்வத்தில் இட்டு பேரண்டத் தயிலம் சேர்த்து கடைய வேண்டுமாம்.கடைந்த பின் அதனை வழித்து எடுத்து, யானைத் தந்ததால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படி சேகரம் செய்யும் போது "ஓம் கிலி ரங் ரங்" என்ற மந்திரத்தினை செபித்துக் கொண்டே செய்திட வேண்டுமாம்.உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உலகில் உள்ள யாரும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார். பின்னர் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று யோகம் தவம் போன்றன செய்து தன்னை அறிந்து கொள்ளகூறுகிறார். இந்த திலகத்தை அழித்து விட்டால் உருவம் பிறர் கண்களுக்குத் தென்படத் தொடங்கிவிடும் என்கிறார். தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. பாஷாணம்பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். பாஷாணத்தில் 64 வகையுண்டு. 64 பாஷாணத்தில் நீலி என்பது ஒரு பாஷாணம்.இந்த நீலி எனும் பாஷாணம்63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது. நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் கண்ட விதி முறைகளை உபயோகித்துக் கட்டுவதாகும். நவ (ஒன்பது) பாஷாணம்தொகுநவ பாஷாணம் என்பது சித்தர் மரபறிவியலாகும் நவபாஷாணம் கட்டுவது என்பது ஒரு சித்தர் வேதியியல் முறையில் வெவ்வேறு இயற்பியல மற்றும் வேதியியல் பண்புகளைக்கொண்டபாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பைஉருவாக்குவதே சித்தர்களின் வேதியியல் ஆகும். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களைக் கொண்டது. அவை:எண் பாஷாணம் (அ) விஷம்1 சாதிலிங்கம்.2 மனோசிலை3 காந்தம்4 காரம்5 கந்தகம்6 பூரம்7 வெள்ளை பாஷாணம்8 கௌரி பாஷாணம்9 தொட்டி பாஷாணம்"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளுகௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர் அதற்கான நவீன வேதியல் விளக்கம்.கௌரிப் பாஷாணம்: Arsenic Penta sulphite (Arsenic pentasulfideis an inorganic compound contains arsenic and sulfur with the formula. The identity of this reddish solid remains uncertain. Solids of the approximate formula As2S5 have been used as pigments and chemical intermediates but are generally only of interest in academic laboratories, Arsenic and many of its compounds are especially potent poisons. Many water supplies close to mines are contaminated by these poisons. Arsenic disrupts ATP production through several mechanisms.) கெந்தகப் பாஷாணம்: Sulfur (Elemental sulfur is non-toxic, but it can burn, producing sulfur dioxide. Although sulfur dioxide is sufficiently safe to be used as a additive in small amounts, at high concentrations it harms the lungs, eyes or other tissues. In organisms without lungs such as insects or plants, it otherwise prevents respiration. Sulfur trioxide and sulfuric acid are similarly highly corrosive, due to the strong acids that form on contact with water) சீலைப் பாஷாணம்: Arsenic Di sulphite வீரப் பாஷாணம்: Mercuric Chlorideகச்சாலப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லைவெள்ளைப் பாஷாணம்: Arcenic Tri Oxideதொட்டிப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லைசூதப் பாஷாணம்: Mercuryசங்குப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை சித்தர் வேதியியல்தொகுமேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாகக ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்), ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன. சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர். எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத்தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும். புடம்போடுவது என்பது சித்தர்களின் மற்றொரு வேதியியல் பிரிவு எனலாம். சித்த மருந்துக் கட்டு ஒவ்வொன்றுக்கும்அவற்றின் சேர்க்கைக்கும்,தயாரிப்புக்கும்ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் இது;புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கைஎண் புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை1 காடைப் புடம் 12 கவுதாரிப் புடம் 33 குக்குடப் புடம் 10 (அ) 84 வராக புடம் 505 கஜம் (அ) யானை புடம் 500 (அ) 10006 கன புடம் 700 (அ) 8007 மணல் மறைவுப் புடம் 8008 கோபுடம் 1000நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை: வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்.எண் புடம் பெயர் பயன்படும் பொருள்1 கோபுர புடம் மணல்2 பாணிடப் புடம் தண்ணீர்3 உமிப் புடம் உமி4 தானியப் புடம் நெல்5 சூரியப் புடம் வெயில்6 சந்திரப் புடம் நிலவொளி7 பருவப் புடம் பௌர்ணமி நிலவு8 இருள் புடம் அமாவாசை இரவு9 பனிப்புடம் பனி10 பட்டைப் புடம் மரத்தூள்11 நிழற்புடம் சூரிய ஒளி படாத அறைநவ பாஷாணக் கட்டுதொகுநவ பாஷாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது எனலாம். ஏனென்றால் நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின்தன்மையை கொண்டுள்ளதாம். மேலும் பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகிறதாம். நவ பாஷாணத்தினால் கட்டி உருவாக்கப்படும்தெய்வசசிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகிறதுஎன்று சித்தர்கள் நம்பினார்கள்.
பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!
Author: Sabtharishi /காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை...மாந்திரிகம்என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் கோரக்கர்அருளிய" சந்திரரேகை"
எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாகநீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கேதீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.-கோரக்கர்.இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்தயந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தையபதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.இப்போது வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு “ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே” என்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல்போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டுநீங்கிவிடும் என்கிறார்.அகத்தியர் தரிசன அருள் பெற!
Author: Sabtharishi /சித்தர் பக்தன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த அகத்தியர் தரிசன அருள் விதியை கீழே தருகிறேன். யாம் பெற்ற இன்பம்இவ்வையகம் பெறுக என்கிற எண்ணத்தில், எல்லோரும் அருள் பெறுங்கள்.அகத்தியரின் பாதார விந்தங்களை பணிந்து கொண்டு செப்புகிறேன். வீட்டில் அகத்தியருக்காக ஒரு அறையை தேர்ந்தெடுத்து.அதை கழுவி அதில் மங்சள் நீரை தெளிக்க வேண்டும். அந்த அறையில் அசைவம் கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர் அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர் தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து கீழ் காணும் மந்திரத்தை சொல்ல வேண்டும். சித்தர்களை வரவைக்கும் மந்திரம். -- : ஓம் சிங்ரங் அங்சிங் மசிவசி . என்று தியானத்தால் தியானிப்பவரின் பிரான ரிதத்தில் அது உடுருவும் போது கோடிட்ட இடத்தில் அவரவர் விரும்பும் முன்னோடி தமிழ் சித்தர்களை பூர்த்தி செய்து ஏற்க்கும் போது தியானிப்பவரின் பிராணசலனம் அந்த சித்தரை வரவைக்கும் ! ! சித்தர்களால் நிரூபணமானதுதான் ! ஓம் பசு பதிபஷராஜநிரதிசய சித்ருப ஞானமூர்த்தாயதீர்க்க நே த்ராயகணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம்ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்னபாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து. இவ்வாறு108 தடவை கூற வேண்டும். ”மனதில் தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம். தரிசிப்பவர் முதலில் அவரின் காலில் விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர் தேவையான வரத்தை கேட்கவேண்டும்.அதன் பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல மந்திரத்தை சொல்லுவார். அதை யாரிடமும் கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும் ஞானகுரு ஆகலாம்.
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள்
Author: Sabtharishi /டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவைஇல்லை. பாம்பு கடித்து விட்டால்இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால்உடலில் உயிர் மட்டும் இருக்கும்.கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள..." அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்". அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டுவிடவும். மீண்டும் அவருக்கு உயிர் வந்துவிடுமாம்..
பாவங்கள் விலக மந்திரம்
Author: Sabtharishi /அகத்தியர் அருளியது, காணவே யின்னமொரு சூட்சங்ககேளுகருணையுட னுலத்தோடிருக்கும் போதுபூணவே கண்ணாரக் கண்டபாவம்புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்பேணவேகாதாரக் கேட்டபாவம் பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம் ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம் ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளகாரப்பா கருணைவிழி மனக்கண்ணாலேகாலறிந்து யோகமதால் அங்லங்கென்றுநேரப்பா நிலையறிந்து நிலையில்நின்றுநீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தான அகத்தியர் பரிபூரணம் 1200 நூலில் இருந்துஉங்களின் பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன் கேளுங்கள், நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும் உங்கள் வாழ்வில் பாவங்கள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும் அதை தடுக்காமல் போவதும்( கண்ணாரக் கண்டபாவம்), தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை கேட்பது(காதாரக்கேட்டபாவம்) உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்) பெண்களை கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவதுஓரறிவு முதல் ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின் முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு சூட்சம மந்திரத்தைசொல்கிறேன்கேளுங்கள். உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து (இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு மனஓர்நிலையோடு மனதினுள் ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும்விலகி விடும் என்கிறார் அகத்திய மாமுனிவர்
அகஸ்தியரை நேரில் தரிசிக்க மந்திரம்.
Author: Sabtharishi / Labels: அகத்தியர்கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும். ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை தினமும ் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு, இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும். 45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால், இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது; ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார். அல்லது நேரில் வருவார். மந்திரம்: ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரேஎன் குருவே வா வா வரம் அருள்கஅருள் தருக அடியேன் தொழுதேன். இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது. மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது. இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும். பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள்5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவம் எதாவது சந்தேகம் இருந்த inbox வந்து கேளுங்க
செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்மந்திரம்...துக் கட்டு
Author: Sabtharishi /அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள். யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை. ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனிமந்திரத்தைக் கேள், “ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,லங்காபுரி ராவண சம்ஹாரா, சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களைபிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்குஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா" திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள், பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காதுஎன்கிறார் அகத்தியர். இத்துடன்" பாவி தானாக்கால் யேது மேன்மை"என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் பலிக்காது.
அஷ்டகர்ம சித்தி - தேரையர்
Author: Sabtharishi /தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார். தன்மையுடன் நமசிவய தம்பனந்தான் தானான யவசிமந வசியமாகும் மின்னின்ற சிவயநம உச்சாடந்தான் முயங்கி நீ வசியநம அழைப்பதாகும் ஒன்றான நயவசிம மோகனந்தான் உருவுவய நமசியும் வித்துவேடமாமே வேடமெனும் மநயவசி பேதனந்தான் வினையமுடன் மசிவயந மாரணந்தான் நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத் தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத் திடமாக எட்டெட்டும் சித்தியாகும் சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான் தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே. தேரையர் சிவபூசாவிதி பொருள்: நமசிவய - தம்பனம் யவசிமந - வசியம் சிவயநம - உச்சாடணம் வசியநம - ஆக்ருஷ்ணம் நயவசிம - மோகனம் வயநமசி - வித்துவேஷ்ணம் மநயவசி - பேதனம் மசிவயந - மாரணம் அஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொருகர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் ஐயும் கிலியும் சவ்வும் என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம் உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார் தேரையர்.
வாலை தேவி மஹா மந்திரம்
Author: Sabtharishi /வாலை தேவி என்பவள் சித்தர்களால் வணங்கி வழிபட்டு வந்த ஓர் பெண் தெய்வமாகும். அவ்வாறு சித்தர்களால் வழிபட்டு வந்த தேவியை நாமும் வழிபட மாந்திரிகம் என்னும் நூலில் தேவியின் மந்திரத்தையும் வழிபடும் முறையையும் கருவூரார் சித்தர் கூறியிருக்கிறார். கீழ் காணும் மந்திரத்தை ஒரு லட்சம் உரு ஜெபிக்க சித்தியாம். மூலமந்திரம்: "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹா" இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. மேலும் இந்த தேவியால் சர்வ சுப காரியங்களும் சித்தியாகும். செல்வம் பெருகும். உடலில் உள்ள நோய்களெல்லாம் விலகி விடும்
பூர்வ ஜென்ம பாவம் போக்கும் அகத்தியர் மூல மந்திரம்
Author: Sabtharishi /https://youtu.be/teyg0ueXV58
சித்தர்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் என்றால் அது அகத்தீச பெருமான் மட்டுமே. இவர் சித்தர்களுக்கெல்லாம் குருவாக அறியப்படுகிறார். தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை எழுதியவரும் இவரே. இவர் அறியதா சித்தர் கலை ஏதும் இல்லை. இவரை அறியாத சித்தர்களும் இல்லை. இப்படி பல சிறப்புகள் பெற்ற அகத்தியரின் மூல மந்திரம் அதை ஜெபிப்பதன் பயனாக நமது பூர்வ வினை பாவ தோடங்கள் அகலும். அதோடு மேலும் பல அறிய பலன்களையும் பெற இயலும் அகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் சற்குருவே ஓம் அகஸ்திய கிரந்த கர்த்தாய நம அகத்தியரை வழிபட நினைப்பவர்கள் உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அசைவம், மது போன்றவற்றை உன்ன கூடாது. தினமும் காலையில் குளித்திவிட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால், அகத்தியர் நமக்கு சூட்சும வடிவில் வழிகாட்டுவார். அவரின் வழிகாட்டுதல் படி நாம் நடந்தால் நமது பாவங்கள் அகலும், நமது உள்ளத்தில் இனம் புரியாத இன்பம் பெருகும், ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பிறவி இல்லா பெருநிலையை அடைய வழி பிறக்கும்.Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...