1 .அணிமா - யார் கண்ணுக்கு புலப்படாமல் ஒரு சிறு அணுவாக சஞ்சரிப்பது 2. மகிமா - ஓரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவது 3.லகிமா - உடலை எடையற்றதாக்கி காற்றில் மிதப்பது 4. கரிமா - உடல் எடையையும்,வலிமையையும் ஒரு மலைக்கு சமமாக உயர்த்திக் கொள்ளுதல் 5.ப்ராப்தி- நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்பது 6.ப்ரகாம்யம் -விரும்பிய அனைத்தையும் எளிதாகப் பெறுவது 7.ஈசித்வம் - எவ்விதமான சக்தி படைத்தவரையும் அடக்கி ஆள்வது 8.வசித்வம் - உலகம் முழவதையும் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பது . ஆகியனவாகும். மாயமாய் மறைவதெப்படி? ஒருவரை நாம் கண்டே பிடிக்க முடியாவிடில், அவன் மாயமாய் மறைந்து விட்டான் என உவமையாகச் சொல்வது வழக்கம். மற்றபடி நமது புராணக் கதைகளின் ஊடே ஒரு இடத்தில் இருந்து சட்டென மறைந்து வேறு இடத்தில்தோன்றுதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது. நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா? சாத்தியமே என்கிறார் அகத்தியர். "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. ஆமாம்.. நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் அஞ்சன மை ஒன்றைப் பற்றி கூறியிருக்கிறார். அதை எப்படி தயார் செய்வது? சித்தியுள்ள அஞ்சனந்தா னொன்றுகேளுதிறமான தேவாங்கு காமரூபிபத்தியுள்ள கருக்குருவி மூன்றின்பிச்சும்பாலகனே ஒன்றாக கருக்கிக் கொள்ளுசுத்தமுள்ள முட்டோட்டி லிட்டுக்கொண்டுசூதுகப டில்லாமல் வருக்கும்போதுபத்தியுடன் தானுருகி மையாய்நிற்கும்மார்க்கமுடன் கல்வமதில் வைத்துக்காணேகாணவே பேரண்டத் தயிலம்விட்டுகடைந்தெடுக்கும்போதிலிருக் கண்ணிற்காணும்ஊணவே ஓம்கிலிரங்ரங் கென்றேதான்உத்தமனே தான்செபித்து வழித்துக்கொண்டுபேணவே மதகரியின் கொம்பில்வைத்துபிலமான சிமிழதனைப் பதனம்பண்ணிபண்ணியந்த மையெடுத்துத் திலதம்போட்டுகண்ணிறைந்த காட்சியிலே நின்றால்மைந்தாகாசினியி லுனதுருவைக் காணமாட்டார் புண்ணியனே மனதுகந்த யிடத்தில்நின்றுபோதமுடன் ஞானநெறி தன்னைப் பாருதன்னருளைத் தனதாகப் பார்த்துப்பின்புசங்கையுடன் திலதமதை யெடுத்துப்பாரே என்னசொல்வேன் உனதுரு கண்ணிற்காணும்தேவாங்கு, காமரூபி, கருக்குருவி ஆகியவற்றின் பிச்சுக்களை ஒன்றாக எடுத்து கருக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சுத்தமான முட்டை ஓட்டில் சேகரித்து வறுத்து எடுத்துக் கொள் வேண்டுமாம். அப்போது அவை உருகி மை போலாகி இருக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மையை கல்வத்தில் இட்டு பேரண்டத் தயிலம் சேர்த்து கடைய வேண்டுமாம்.கடைந்த பின் அதனை வழித்து எடுத்து, யானைத் தந்ததால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படி சேகரம் செய்யும் போது "ஓம் கிலி ரங் ரங்" என்ற மந்திரத்தினை செபித்துக் கொண்டே செய்திட வேண்டுமாம்.உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உலகில் உள்ள யாரும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார். பின்னர் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று யோகம் தவம் போன்றன செய்து தன்னை அறிந்து கொள்ளகூறுகிறார். இந்த திலகத்தை அழித்து விட்டால் உருவம் பிறர் கண்களுக்குத் தென்படத் தொடங்கிவிடும் என்கிறார். தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. பாஷாணம்பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். பாஷாணத்தில் 64 வகையுண்டு. 64 பாஷாணத்தில் நீலி என்பது ஒரு பாஷாணம்.இந்த நீலி எனும் பாஷாணம்63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது. நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் கண்ட விதி முறைகளை உபயோகித்துக் கட்டுவதாகும். நவ (ஒன்பது) பாஷாணம்தொகுநவ பாஷாணம் என்பது சித்தர் மரபறிவியலாகும் நவபாஷாணம் கட்டுவது என்பது ஒரு சித்தர் வேதியியல் முறையில் வெவ்வேறு இயற்பியல மற்றும் வேதியியல் பண்புகளைக்கொண்டபாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பைஉருவாக்குவதே சித்தர்களின் வேதியியல் ஆகும். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களைக் கொண்டது. அவை:எண் பாஷாணம் (அ) விஷம்1 சாதிலிங்கம்.2 மனோசிலை3 காந்தம்4 காரம்5 கந்தகம்6 பூரம்7 வெள்ளை பாஷாணம்8 கௌரி பாஷாணம்9 தொட்டி பாஷாணம்"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளுகௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர் அதற்கான நவீன வேதியல் விளக்கம்.கௌரிப் பாஷாணம்: Arsenic Penta sulphite (Arsenic pentasulfideis an inorganic compound contains arsenic and sulfur with the formula. The identity of this reddish solid remains uncertain. Solids of the approximate formula As2S5 have been used as pigments and chemical intermediates but are generally only of interest in academic laboratories, Arsenic and many of its compounds are especially potent poisons. Many water supplies close to mines are contaminated by these poisons. Arsenic disrupts ATP production through several mechanisms.) கெந்தகப் பாஷாணம்: Sulfur (Elemental sulfur is non-toxic, but it can burn, producing sulfur dioxide. Although sulfur dioxide is sufficiently safe to be used as a additive in small amounts, at high concentrations it harms the lungs, eyes or other tissues. In organisms without lungs such as insects or plants, it otherwise prevents respiration. Sulfur trioxide and sulfuric acid are similarly highly corrosive, due to the strong acids that form on contact with water) சீலைப் பாஷாணம்: Arsenic Di sulphite வீரப் பாஷாணம்: Mercuric Chlorideகச்சாலப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லைவெள்ளைப் பாஷாணம்: Arcenic Tri Oxideதொட்டிப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லைசூதப் பாஷாணம்: Mercuryசங்குப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை சித்தர் வேதியியல்தொகுமேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாகக ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்), ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன. சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர். எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத்தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும். புடம்போடுவது என்பது சித்தர்களின் மற்றொரு வேதியியல் பிரிவு எனலாம். சித்த மருந்துக் கட்டு ஒவ்வொன்றுக்கும்அவற்றின் சேர்க்கைக்கும்,தயாரிப்புக்கும்ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் இது;புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கைஎண் புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை1 காடைப் புடம் 12 கவுதாரிப் புடம் 33 குக்குடப் புடம் 10 (அ) 84 வராக புடம் 505 கஜம் (அ) யானை புடம் 500 (அ) 10006 கன புடம் 700 (அ) 8007 மணல் மறைவுப் புடம் 8008 கோபுடம் 1000நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை: வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்.எண் புடம் பெயர் பயன்படும் பொருள்1 கோபுர புடம் மணல்2 பாணிடப் புடம் தண்ணீர்3 உமிப் புடம் உமி4 தானியப் புடம் நெல்5 சூரியப் புடம் வெயில்6 சந்திரப் புடம் நிலவொளி7 பருவப் புடம் பௌர்ணமி நிலவு8 இருள் புடம் அமாவாசை இரவு9 பனிப்புடம் பனி10 பட்டைப் புடம் மரத்தூள்11 நிழற்புடம் சூரிய ஒளி படாத அறைநவ பாஷாணக் கட்டுதொகுநவ பாஷாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது எனலாம். ஏனென்றால் நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின்தன்மையை கொண்டுள்ளதாம். மேலும் பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகிறதாம். நவ பாஷாணத்தினால் கட்டி உருவாக்கப்படும்தெய்வசசிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகிறதுஎன்று சித்தர்கள் நம்பினார்கள்.
Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...
0 comments:
Post a Comment