தேரையர் ரசமணி
தேரையர் இஷ்ட தெய்வத்தின் சித்திகளை கிடைக்க ஒரு ரசமணியைக் கூறுகிறேன் இப்பபாடலின் வாயிலாக அந்த ரசமணி செய்திடும் வித்தை கூறுகிறேன் ...
கேளப்பா புலஸ்தியனே ரசத்தில் போதாம் கெடிபடா சிவனைப் போல் வார்த்துக் கொண்டு தாளப்பா பூஜை செய்யக் கைலாச போதம் தப்பாமல் சதா கோடி காலமாகும் தேளப்பா கொட்டினதோர் விஷத்தை ப் போல தேடரிது ரசத்தினுட குளிகை யோகம்
வாளப்பா புலஸ்த்தியனே நாவினுள்ளே வாயடக்கம் செய்து கொள்ள யேகமாச்சே
ஆச்சப்பா புலஸ்த்தியனே சூதம் கட்ட ஆராலும் முடியாது அறிவான் சித்தன் போச்சப்பா அக்கினியில் செயித்ததனால் பேரண்டம் கிழிந்தாடும் வேதையைக் ஆகும் நீச்சப்பா இதை கட்ட வகையைக் கேளு நீதி எவர்களும் கூட வரி வரி தாமப்பாஎச்சப்பா இதனுடைய வர்மம் சொல்வேன் எந்தனுக்கு பரையீசன் இதை தந்தானே
தானேன்ற புலத்தியனே வகையைக் கேளு தயங்காமல் சொல்கிறேன் வகை தானப்பாகோனென்ற அழலாடி எனக்கு சொன்னார் குறிப்பாக மனந்தேறி கூறிச் சென்றேன் ஏனென்றால் புலஸ்த்தியனே உனக்குயானும்
இன்பமுடன் சொல்லி விட்டேன் கருத்தானப்பா இன்பமுடன் சொல்லி விட்டேன் கருத்தானப்பாஊனென்ற சூதமொன்று வெள்ளையொன்றுஉத்தாமணி சாரதனால் இதனை ஆட்டே
கொள்ளப்பா மணியது போல் உருகியாடும் குரு முகம் போல் ஒளிவுமிகும் கருப்பதாகும்
மெள்ளப்பா அதனுய வேதை மார்க்கம்
வெட்ட வெளி குருடனுக்கு மெய்க் கோலப்பா
உள்ளப்பா இதுவல்ல காரிய சித்தி தாண்டவமே புரிவதற்கு பூஜை பண்ணே
பண்ணப்பா ஓராண்டு பூஜை செய்தாயாகில்
பராபரமே உனக்கு வந்து ஏவல் செய்யும்
விண்ணப்பா ஒருவருக்கும் மணி சொல்லாதே
வேதாந்த நரகத்தில் வீழ்ந்து மாள்வர்
கண்ணப்பா உனக்கேத்த பிள்ளையானால்
கை முறையாய் செய்து அவன் குணத்தைப் பாரு
ஒண்ணப்பா கருவைத் தான் ஒளிக்கவில்லை உற்றுணர்ந்து மனம் தேறி பாரு பாரே
பாரப்பா இதற்கு கைலாசம் உண்டாம்
பாரார்கள் சித்தர் இதை மறைத்துப் போட்டார்
ஆரப்பா எனைப் போல திறந்து சொல்வார்
ஆச்சரியம் இதனுடைய வேகமப்பா
ஓரப்பா இதனாலே யோக சித்தி உத்தமனே சிவபூஜை பண்ண நனறு காரப்பா இது தனக்கு பூஜைசெய்து
கருவாக அர்ச்சனை செய்பதங்கம் செய்யே
செய்யப்பா இப்படியே பூஜை கொண்டு திறமாகச் செய்ய வல்லோர் பலத்தைக் கேளு
மெய்யப்பா அவனுடைய பிதுர்களுக்கெல்லாம்
மிக்க கோடி நரா ஜென்மம் அல்ல அல்ல
பொய்யப்பா சொல்லவில்லை தேர்ந்து பாரு புலத்தியனே உன்றனுக்குக் கருவை சொன்னேன்
வையப்பா பூஜையிலே என்னை வைத்து
மவுனமாய் சிவனை வைத்து நோக்கு நீயே
நீயென்றும் நானென்றும் வேறுமில்லை
நீராகரம் போல உந்தனுக்கு காணும்
நாயென்றும் ஜன்மத்தால் தாண்டியே ஏத்தும்
நற்ஜென்மம் அல்ல அப்பன் சித்தன் சித்தன்
பாயென்றால் கூடு விட்டு கூடு பாயும்
பதறாமல் இருந்து கொள்ள கவுனம் சாரும்நோ யென்ற வறுமையெல்லாம் அகன்று போகும்நூ ண்ணியமாய் சிவாலிங்ப போதம் தானே தானென்ற குளிகை
ஜெபமாலை செய்து
தாக்கப்பா பதினாறு நடத்தானொன்று
மானென்ற மதி யானை வட்டம் செய்ய
மகமேரு போலவுமே ஒளியும் காணும்
கோனென்ற அவள் ரூபம் சொல்லப் போகா
கோடி ரூபம் அவன் சொல்லக் கேளு
தொனென்ற மனோன்மணியால் சிவனுமங்கே
சித்தித்த போதமெல்லாம் தெரியும் தானே
பொருள்...
வெள்ளை பாஷாணம் முப்பத்தைந்து கிராம் பாதரசம் முப்பத்தைந்து கிராம் என எடுத்து ஒன்றாகக் கல்வத்திலிட்டு உத்தமணிச் சாறினை விட்டு மையாக அரைத்திடவும்ங அரைத்தெடுத்த விழுதை சட்டி ஒன்றிலிட்டுச் செம்பினாச் செய்த மூடி கொண்டு மூடி சீலைமண் வலுவாபச் செய்திவும் பின் இதனை முறையாகப் புடமிட்டு கடுக்கவும் புடம் ஆறியதும் உள்ளிருக்கும் மருந்தை எடுத்துக் காரம் சேர்த்து உருக்க இரசமணியாகும் இம்மணியின் மகிமையால் முக்காலத்தையும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து உணரலாம் தேகசித்தியும் உண்டாகும் இம்மணியால் தனம் தானியங்கள் அனைத்தும் தாமாக வந்து சேர்ந்திடும் மண்ணில் புதையுண்டிருக்கும் புதயலை இம்மணியால் அறிந்து எடுத்திடலாம்

0 comments:
Post a Comment